வளர்ந்து நிமிர்ந்த இந்தியா என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் விழிப்புணர்வு, மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் சுவர்ணலதா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மாரியப்பன் வரவேற்றார். தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழுத் தலைவர் ஜெகஜீவன் முன்னிலை வகித்தார்.
மருத்துவர்கள் டாக்டர் மாரிமுத்து, டாக்டர் பாலக்கண் ணன் ஆகியோர், மாணவர்கள் சத்தான உணவுகளை உட்கொள்வதன் அவசியம் குறித்து விளக்கினர்.



