fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி பாய்மன வாய்க்காலை தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கம்

தூத்துக்குடி பாய்மன வாய்க்காலை தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கம்

தூத்துக்குடி முள்ளக்காடு முத்தையாபுரம் – அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஸ்பிக் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பாய்மன வாய்க்காலைத் தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (4ம் தேதி) காலை பாய்மன வாய்க்கால் தூர்வாரும் பணி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.


இப்பணியின் தொடக்க நிகழ்விற்கு ஸ்பிக் நிறுவன உதவிப் பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்துத் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்தப் பணியானது தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் தொடர்பு உதவி மேலாளர் மணிகண்டன், முகப்பு நிலை அலுவலர் சரவணன், விவசாய சங்கத் தலைவர் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img