கோவையில் ஃபேர்ப்ரோ 2026 வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா வருகிற 7ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சி விற்பனை கொடிசியா வளாகத்தின் ஹால்-டி அரங்கில் நடைபெறுகிறது.
இது குறித்து கோவை கிரெடாய் தலைவர் அர விந்த் குமார், செயலாளர் சஞ்சனா விஜயகுமார், பொருளாளர் மற்றும் ஃபேர்ப்ரோ 2026 தலைவர் கார்த்திக் குமார் ஆகியோர் கூறியதாவது:-
கோவையில் மூன்று நாள்கள் நடைபெறும் இக் கண்காட்சியில், 35-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளது. 100க்கும் அதிகமான குடியிருப் புத் திட்டங்கள் இடம்பெறு கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பாதுகாப்பு வசதியுடன் கூடிய குடியிருப்புகள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள், உயர்தர மனைகள், ஆடம்பர வீடுகள் மற்றும் முதலீட்டுக்கான சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை பார்வையாளர்கள் ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யலாம்.
மேலும், முன்னணி வங்கிகளும் இக்கண் காட் சியில் பங்கேற்பதால், வீட்டுக் கடன் திட்டங் களை ஒப்பிட்டு பார்க்க வும், உடனடி நிதி ஆலோ சனைகளைப் பெறவும், தங்களது தேவைக்கு ஏற்ப சிறந்த கடன் திட் டத்தைத் தேர்வு செய்து சொத்து வாங்கும் முடிவை எடுக்கவும் வசதி செய்யப் பட்டுள்ளது. கண்காட்சி நடைபெறும் மூன்று நாள்களிலும் மட்டுமே வழங்கப்படும் பிரத்யேக ஃபேர்ப்ரோ சலுகைகள், வீடு வாங்குவோருக்கு கூடுதல் பயனளிக்கும்
மேற்கண்டவாறு அவர் கள் கூறினார்கள்.



