“200
யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்” மூலம் கோவை மாவட்டத்தில் 13.38 லட்சம் மின் நுகர்வோர்கள் பயன் பெறுகின்றனர். அந்தப் பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு “நிறைந்த மனதுடன்“ நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.“மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு, பதவியேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10&05&2026 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற கோப்புகளில் கையொப்பமிட்டார்.

இதில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சிரமத்தை போக்கும் வகையிலான சிறப்பான திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் சாதாரண குடும்பங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், மாதாந்திர மின்கட்டணச் செலவை குறைத்து குடும்ப பொருளாதாரத்திற்கு ஆதரவாக அமையும் என நுகர்வோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டத்தில், 200 யூனிட் இலவச மின்சாரம் மூலம் 13 லட்சத்து 38 ஆயிரத்து 555 மின் நுகர்வோர் பயன் அடைந்துள்ளர்கள். 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் 7 லட்சத்து 77 ஆயிரத்து 648 மின்நுகர்வோர் இனி கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. இதில் 200 யூனிட் இலவச மின்சாரத்தால் பயன்பெறும் நுகர்வோர்கள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரம் மூலம் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் 13 லட்சத்து 38 ஆயிரத்து 555 பேர் பயன் அடைகிறார்கள்.
இதில் 100 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 546பேர், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் 3 லட்சத்து 86 ஆயிரத்து 102பேர். இந்த 2 பிரிவை சேர்ந்தவர்களும் இனி மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 4 லட்சத்து 79 ஆயிரத்து 946பேர், 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 80 ஆயிரத்து 961 பேர். இவர்கள் 200 யூனிட் இலவச மின்சாரம் மூலம் முழுமையாக பயன்பெறுகிறார்கள். 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 34 ஆயிரத்து 950 பேர், 601 யூனிட் முதல் 800 யூனிட்வரை பயன்படுத்துபவர்கள் 24 ஆயிரத்து 355 பேர், 801 முதல் 1000 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 7 ஆயிரத்து 126 பேர், 1000 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்துவர்கள் 6 ஆயிரத்து 426 பேர். இவர்கள் வழக்கமான 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவார்கள்.
200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பயன் பெறுவார்கள். ஏ.சி. உள்ளிட்ட குளிர்சாதன வசதி கருவிகளை பொருத்தாத நகர்ப்புற மக்கள் குறைந்த எண்ணிக்கையில் பயன்பெறுகிறார்கள். 200 யூனிட் இலவச மின்சாரம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண செலவினத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.
பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு பயனளிக்கும் திட்டத்தில் பயனடைந்த பயனாளி திருமதி.ஹேமமாலினி தனது நன்றிகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்ததாவது:
எனது பெயர் ஹேமாமாலினி, கோவை கே.கே.புதூரில் வசித்து வருகிறேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பமாகும். இதுநாள் வரை ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் செலுத்த சிரமப்பட்டு வந்தோம். தற்போது புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு 500 யூனிட்டிற்குள் உள்ள நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது.

தற்போது, எங்களுக்கு மின்கட்டணமே வருவதில்லை. இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை வீட்டின் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறேம். இத்திட்டத்தின் பயனாளிகளில் ஒருவராக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளி தியாகராஜன் தனது நன்றிகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்ததாவது:
எனது பெயர் தியாகராஜன் சாய்பாபா காலனியில் வசித்து வருகிறேன். எனது வீட்டு உபயோக மின் இணைப்பு எண் 022 010 1354 ஆகும். எனது மின் இணைப்பு 29.01.2016 அன்று வீட்டு குடியிருப்பு பயன்பாட்டிற்காக பெறப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், 10.05.2026 முதல் வீட்டு உபயோக மின் நுகர்வு 500 யூனிட்டிற்குள் உள்ள நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் பயனாளிகளில் ஒருவராக நானும் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கோவை மாவட்டம்



