fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்டம் அறிமுகம்

சென்னையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்டம் அறிமுகம்

காவேரி மருத்துவமனை குழுமம், சென்னையில் உள்ள தனது மூன்று மருத்துவமனைகளிலும் ஒரே தரத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சேவையை வழங்கும் நோக்கில் ‘காவேரி 3X சென்னை’ என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 4-ஆம் தலைமுறை டா வின்சி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு குடல்-இரைப்பை அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, சிறுநீரியல், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல், சிறுநீரக உறுப்புமாற்று உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன.காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “மேம்பட்ட தொழில்நுட்பம், பல்துறை நிபுணத்துவம் மற்றும் உயர்தர சிகிச்சையை ஒருங்கிணைத்து, நோயாளிகளின் விரைவான குணமடைதலையும், சிறந்த சிகிச்சை பலன்களையும் உறுதி செய்வதே எங்கள் நோக்கம்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img