fbpx
Homeபிற செய்திகள்திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற 532 மாணவர்களுக்கு பரிசுகள்

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற 532 மாணவர்களுக்கு பரிசுகள்

சேலம் பாலபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 532 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளித் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் விஜய பாரதி மற்றும் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவன வளர்ச்சி அதிகாரி சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அஸ்தம்பட்டி ரேஞ்ச் காவல் உதவி ஆணையர் அஸ்வினி பரிசுகளை வழங்கினார். இதில் மணப்பாறை சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுபலெட்சுமி, ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி பத்மா நேத்ரா, தி சென்ட்ரல் சட்டக் கல்லூரி மாணவர் யஷ்வந்த் உள்ளிட்டோர் முதல் பரிசுகளை வென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img