நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில், வாரந் தோறும் விவசாயம் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை விவசாயிகளுக்கான ‘வாட்ஸ்அப்’ குழுவில் பதிவிட தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், தேயிலை பறிக்கும் இயந்திரத்துக்கான மானியத் திட்டத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயி களுடன், பொதுப் பிரிவு விவசாயிகளுக்கும் விரிவு படுத்துவது தொடர்பாக கருத்துரு அனுப்புமாறு தேயிலை வாரியத்துக்கு அறிவுறுத்தினார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்களை நேரடியாக விற்பனை செய்ய, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.முன்னதாக, 2026-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு நடைமுறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.கூட்டத்தில், தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் மரகதமணி, துணை இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.



