fbpx
Homeபிற செய்திகள்புதிய அங்கன்வாடி மைய கட்டித்தைதிறந்து வைத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

புதிய அங்கன்வாடி மைய கட்டித்தைதிறந்து வைத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி ராஜபாளையம் வட்டம் தளவாய்புரம் ஊராட்சி மாஞ்சோலை கிராமத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் கல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
அதேபோல தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி யில் ரூ.20 லட்சம் மதிப் பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத் தினை அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது:
தமிழ்நாடு அரசு நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப் புறங்களுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உட் கட்டமைப்பு வசதி களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இராஜபாளையம் வட்டம் தளவாய்புரம் ஊராட்சி மாஞ்சோலை பிள்ளையார் கோவில் தெருவில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.4.57 லட்சம் மதிப்பில் 88 மீட்டர் நீளம், 3.5 மீட்டர் அகலத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் குறிப் பிட்ட காலக்கெடு விற்குள் தரமாக முடிக்கப் பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.


மேலும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், ராஜபாளையம் ஊர £ட்சி ஒன்றியம் தெற்கு வெங்காநல்லூர் ஊராட் சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024&-2025 இன் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய அங்கன்வாடி மையத்தில் ஆரம்பள்ளிக்கல்வியில் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலான வண்ண மயமான சுவரோவியங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், அடிப் படை வசதிகளான பாதுகாப்பான குடிநீர், தடையில்லா மின்சாரம் மற்றும் காற்றோட்டமான கட்டமைப்பு, ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரிப்பதற்கான நவீன சமையலறை வசதி, சுகாதாரத்தை பேணும் வகையில் குழந்தை களுக்கான பிரத்யேக கழிப் பறை வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதுபோன்று அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவை யான வசதிகள் தொடர்ச் சியாக செய்து தரப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜ் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img