fbpx
Homeபிற செய்திகள்50 ஆயிரம் செவிலியர்களுக்கு ஹிமாலயா பேபி கேர் மரியாதை

50 ஆயிரம் செவிலியர்களுக்கு ஹிமாலயா பேபி கேர் மரியாதை

இந்திய சுகாதாரத் துறையில் செவிலியர்கள் ஆற்றி வரும் சேவையை பாராட்டும் வகையில், ஹிமாலயா பேபி கேர் நிறுவனம் தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற 15 செவிலியர்களை கௌரவித்ததுடன், நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரம் செவிலியர்களுக்கும் சிறப்பு மரியாதை செலுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹிமாலயா பேபி கேர், ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள்-2026 வழங்கும் விழாவில் பங்கேற்றது. இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்தின் (ஜிழிகிமி) அழைப்பின் பேரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிறுவனம், செவிலியர் பணியில் சிறந்து விளங்கி, நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த 15 தேசிய விருது பெற்ற செவிலியர்களை பாராட்டி கௌரவித்தது.

இதுகுறித்து நிறுவன தரப்பில் கூறப்பட்டதாவது:
சுகாதாரத் துறைக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் பணியாற்றி வரும் சுமார் 50 ஆயிரம் செவிலியர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் சிறப்பு பாராட்டு இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img