fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பெண்களுக்கான புதிய சொகுசு ஆடை விற்பனையகம் திறப்பு

கோவையில் பெண்களுக்கான புதிய சொகுசு ஆடை விற்பனையகம் திறப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு பொன்னுரங்கம் சாலையில், பெண்களுக்கான புதிய சொகுசு ஆடை விற்பனையகத்தை கையாரா நிறுவனம் திறந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உயர்தர ஆடைத்தொகுப்பான ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கையாரா நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷா வர்தினி கூறியதாவது:
இந்தியாவின் பாரம்பரியம், கைவினைக் கலைஞர்களின் திறமை மற்றும் கலாசார செழுமையை கொண்டாடும் வகையில் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வடிவமைப்புகளுக்கும் நவீன சொகுசு ஆடை பாணிக்கும் இடையே பாலமாக இந்தத் தொகுப்பு அமையும்.
கையாரா நிறுவனத்தில் அன்றாட பயன்பாட்டிற்கான ஆடைகள், மணமகள் ஆடைகள், விடுமுறை மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு ஏற்ற ரிசார்ட் உடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பெண்கள் ஆடைகள்
வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img