ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி செயலர் என்.ஆர்.டி. பிரேம்குமார் மற்றும் துணைச் செயலர் டாக்டர் பி.இ.ஆர். பிரேம்சந்த் ஆகி யோரின் ஆலோசனையின்பேரில் விழிப்பு ணர்வு பேரணி நடத்தப்பட்டது.
முன்னதாக பள்ளி தமிழாசிரியர் கோமதி, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் விளக்கமளித்தார். தொடர்ந்து பள்ளி முதல்வர் அக்ரியா ஜான்சி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி சுப்பிரமணியம் பாளையம் சாலை வழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இதையொட்டி பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்காக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அன்புவடிவு, மேரி ரமணி, ரம்யா, சந்தியா, கோமதி, கௌசல்யா, செரிஃபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



