தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் துறையில் தனித்துவமாக இயங்கி வரும் வி.கே.புரமோசன்ஸ் நிர்வாக இயக்குனர் வெற்றிவேல் கோவை ஏஜி புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கினார்.
பிறகு பத்திரிகை யாளர்களிடம் அவர் கூறும்போது, கடந்த ஐந்து வருடமாக இந்த ரியல் எஸ்டேட் துறையில் தாங்கள் இருந்து வருவதாகவும் எங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை எளிய மக்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், அதில் ஒரு பகுதியாக இன்று இந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தற்சமயம் தங்களுடைய நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்டோர்க்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் மீண்டும் ஐந்து மாவட்டங்களில் தங்களுடைய கிளைகளை துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி சண்முகம், ISDO தொண்டு நிறுவன நிறுவனர் லாசர் ராஜன் மற்றும் விகே ப்ரோமோசன்ஸ் நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ், ஹருண், மனித வள மேம்பாடு அலுவலர் அஜய் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



