மலேசியாவில் 2-S சர்வதேச கராத்தே போட்டி கள் கடந்த 22, 23, 24ம் தேதிகளில் நடைபெற்றன. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிரியா உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் கட்டா, குமுகி பிரிவுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தி உள் ளனர். இவர்களில் 5 பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். 4 பேர் பல்லடத்தைச் சேர்ந்தவர் கள், ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர் ஆவர்.
இனியன் கார்த்தி’, கவுதம் கிருஷ்ணா, கார்த்திகேயன், கவின்யா ஸ்ரீ, லிபிஷன், நித்யதர்ஷினி, ரிதன்யா, சக்தி, சபரீஸ் குமார், யாழினி ஆகிய அந்த 10 பேரும் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்து, நாட்டிற்கே பெருமை தேடித் தந்துள்ளனர்.
இந்த தகவலை பாரா அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்கூல் பயிற்சியாளர் ப.செந்தில் குமார் பரமேஸ்வரன் தெரி வித்துள்ளார். சர்வதேச கராத்தே போட்டியில் சாதித்த கராத்தே வீரர்கள், வீராங்கனைகளையும் அவர் வெகுவாகப் பாராட் டினார்.



