கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி நிறுவன நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.இராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரி மாணவர் சேர்க்கை இயக்குநர் விஷ்ணு நிஷ்சல் ராஜ் குமார் மற்றும் தலைமை கல்வி அதிகாரி முனைவர் என்.ஆர்.அலமேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரி நிர்வாக அறங்காவலர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முன்னாள் மாணவியும் இந்நாளில் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ள கௌரி கைலாசம் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்தியாவில் பெண்கள் உயர் கல்வியில் அதிகமாக ஈடுபட்டிருந்தாலும், வேலை வாய்ப்புகளில் அவர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பது ஒரு முக்கிய முரண்பாடாக இருப்பதை எடுத்துக்காட்டினார். இதை சரிசெய்ய மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாணவர்கள் ஆர்வத்து டன் கேள்விகள் கேட்டு, கற்றலில் ஈடுபட வேண்டும் என்றும், ஆசிரியர்களுடன் மரியாதையான உறவை பேண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சி.ஐ.டி நிறுவனத்தின் மேலாண்மை அறங்காவலர் சந்தோஷ், ஒருவரின் வலிமைகளை வளர்த்துக் கொண்டு, குறைகளை சரிசெய்வதே உண்மையான வளர்ச்சி என்று கூறினார்.
கல்லூரியின் வளர்ச்சியை பெருமையுடன் குறிப்பிடும் அவர், இது தொடர்ந்து உயர்ந்த நிலைகளை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.



