Homeபிற செய்திகள்யங் ப்ரேனர் 2026 நிகழ்ச்சி: ஆர்.கே.எஸ் கல்வி நிறுவன பள்ளி மாணவ தொழில் முனைவோர் அசத்தல்

யங் ப்ரேனர் 2026 நிகழ்ச்சி: ஆர்.கே.எஸ் கல்வி நிறுவன பள்ளி மாணவ தொழில் முனைவோர் அசத்தல்

கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யங் பிரனேர் (Young Preneur) எனும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலை யம் ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக தொழில் முனைவு குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் யங் ப்ரேனர் எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் 2026 ஆண்டில், இளம் தலைமுறை மாணவர்களுக்கு பொங்கல் பண்டிகையின் பண்பாட்டினை மதிக்கவும், தொழில்துறை ஆவலை வளர்க்கவும் யங் பிரனேர் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இதற்கான துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல் துறை துணை ஆணையர் திவ்யா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், சவால்கள் நிறைந்த இன்றைய காலத்தில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் கல்வி பயில்வதோடு கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியமாக இருப்பதாக தெரிவித்த அவர், அதன் அடிப்படையில் மாணவர்கள் வாழ்க்கை திறன் களை அபிவிருத்தி செய்யும் ஒரு தளத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.

மாணவர்களுக்கு நேர டியாக தொழில் துறை அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது சொந்த முயற்சியில் சுமார் 20க்கும் மேற் பட்ட அரங்குகளில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.

இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துணி வகைகள், பேன்சி பொருட்கள், உணவு அரங்குகள் என பல்வேறு அரங்குகளை அமைத்த மாணவர்களிடம் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் பொருட்களை ஆவலுடன் வாங்கி சென்றனர்.

ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்றும் புதிய முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

படிக்க வேண்டும்

spot_img