fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு

நீலகிரியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமை சார்பிலும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி சார்பிலும், ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உபதலை ஊராட்சி பெரிய உபதலை பகுதியில் 2025-2026 ஆம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப் பில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டட பணி யினையும், 2025-2026ம் ஆண்டில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மேற்கூரையமைக்கும் பணியினையும், 2025-2026 ஆம் ஆண்டில் தூய்மை பாரத இயக்கம் பசுமை வரி திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் பாறைக்குழியில் அமைக்கப்பட்டு வரும் நுண் உர கிடங்கினையும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட சிம்ஸ் பூங்கா அருகில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடையினையும் என மொத்தம் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது, குன்னூர் நகராட்சி ஆணை யாளர் இளம்பருதி, குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், விமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img