fbpx
Homeபிற செய்திகள்மருதமலை சுப்பிரமணிய சுவாமி மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ இலவச மருத்துவ முகாம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ இலவச மருத்துவ முகாம்

கோவை வடவள்ளி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உயர் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து, மாத்திரைகள் அளிக்கும் “நலம் காக்கும் ஸ்டாலின்” “பல்நோக்கு உயர் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதனை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தமிழ் மறை, பகுதிக்கழகப் பொறுப் பாளர்கள் வடவள்ளி பகுதி திமுக பொறுப்பாளர் வ.ம.சண்முகசுந்தரம், வீரகேரளம் பகுதி திமுக பொறுப்பாளர் பாபு பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பத்மாவதி ரவிச்சங்கரன், குமுதம் குப்புசாமி. அங்கு லட்சுமி, வட்டக் கழக செயலாளர்கள் விஸ்வநா தன், மகாலட்சுமி, சுரேஷ், மருதமலை மகேஷ் குமார், விஎன்ஆர் நகர் பாலு, சின்னத்தங்கம், ஜெயசூர்யா, குமார், ஆறுமுகம், சிடிசி ராஜன், நிரஞ்சன், சிவசாமி, துரைசாமி, சாந்தாமணி, மகாலட்சுமி, லட்சுமி, மாதவ், சூரிய சரத், பாரதி, வடிவேல், கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பெருந்தி ரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பட்டிமன்ற பேச்சாளர் கோவை சாந்தாமணியும் கலந்துகொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img