fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நடைபெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகளில் 228 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்

கோவையில் நடைபெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகளில் 228 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்

கோவையில், ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய பள்ளி _ கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் 228 மாணவர்கள் பங்கேற்று சாதனை புரிந்தனர்.

அண்மையில் (ஆகஸ்ட் 23 அன்று) கோவை, சபர்பன் மேல்நிலைப் பள்ளியில், ஸ்ரீராம் இலக்கியக் கழகம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்தியது.

இதில் ஓவியப் போட்டியில் இடைநிலைப் பிரிவில் 73 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் 39 மாணவர்களும். கல் லூரி பிரிவில் 3 மாணவர்களும் ஆக மொத்தம் 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுப் போட்டியில் இடைநிலைப் பிரிவில் 36 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் 26 மாண வர்களும், கல்லூரிப் பிரிவில் 6 மாணவர்களும், ஆக மொத்தம் 68 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கட்டுரைப் போட்டியில், இடைநிலைப் பிரிவில் 11 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் 31 மாணவர்களும், கல்லூரி பிரிவில் 3 மாணவர்களும் என மொத்தம் 45 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், கோவை, காட்டூர் காவல் நிலையத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் பிரிவுத் துணை ஆய்வாளர் எஸ்.அய்யா சாமி வாழ்த்துரை வழங்கினார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் உத வித் துணைத் தலைவர் டி.ரமேஷ் பார்த்திபன் தலைமை உரை நிகழ்த்தினார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் கே.சக்திவேல் நன்றி கூறினார்.

பரிசு பெற்ற மாணவர்கள் விவரம் வருமாறு:

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:

  • இடைநிலைப் பிரிவு: பி. ஸ்ரீதேவ், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்
  • மேல்நிலைப் பிரிவு: செ. பிரக லாதன் குமாரசாமி, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம்
  • கல்லூரிப் பிரிவு: நா. நிவேதா, பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.

ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:

  • இடைநிலைப் பிரிவு: ம. ஹர்ஷிதா, டிரினிட்டி இன்டர் நேஷனல் பள்ளி, நாமக்கல்
  • மேல்நிலைப் பிரிவு: மு. அக்ஷயா, சபர்பன் மேல்நிலைப் பள்ளி, கோவை
  • கல்லூரிப் பிரிவு: எஸ்.ஜே. ஆஷின், லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெய்யூர்

கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:

  • இடைநிலைப் பிரிவு: ஆ. நேத்ரா, ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி, மூலத்துறை
  • மேல்நிலைப் பிரிவு: செ. மேகலா, புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை
  • கல்லூரிப் பிரிவு: செ. முரளி, பூ.சா.கோ. மருந்தியல் கல்லூரி, கோவை

படிக்க வேண்டும்

spot_img