அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மாணவிகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யும் பணிகள் இன்று தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் பணிகளை தொடங்கி வைத்து, காலை உணவுகளை வழங்கினார்கள்.
இன்று தொடங்கி வைத்த இந்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 63 பள்ளிகளிலுள்ள 2645 மாணவ, மாணவர்கள் பயன்பெறுவார்கள்.



