fbpx
Homeபிற செய்திகள்கோவையில் விவசாயிகளுடன் கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகள் ஆலோசனை

கோவையில் விவசாயிகளுடன் கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகள் ஆலோசனை

கோவையில் என்.எஸ்.ஆர் ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு சங்கங்களை சார்ந்த விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் அழகிரி தலைமையில் நடைபெற்றது.

இதில் பயிர் கடன்கள், கால்நடை பராமரிப்பு கடன்கள் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

2026&2027க்கான பயிர் கடன் அளவு விகிதங்கள், நெல், வாழை, ராகி, கம்பு, தென்னை, சோளம், நிலக்கடலை, மஞ்சள், மரவள்ளி, வெங்காயம், சப்போட்டா, பப்பாளி, கத்திரிக்காய், தக்காளி, பீட்ரூட், பாகற்காய் மற்றும் இதர பயிர்களுக்கான அளவு விகிதங்கள் துணைக்குழு கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஆலோசனை பெறப்பட்டு அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியிடம் பரிந்துரைக்கப்படும் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் தியாகு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் ஆனந்தி.பி.ஜி. கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் மற்றும் வேளாண் சார்ந்த அமைப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img