fbpx
Homeபிற செய்திகள்சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

சின்ன சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசி, தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சகாயமேரி வாழ்த்துரை வழங்கினார்.


கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தருண் கோபி- 466, தினேஷ் -457, நதீஷ் -436, மௌனகுரு- 436 ஆகியோருக்கும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தமிழரசு -547, தினேஷ்குமார் -510, விக்னேஸ்வரன் -502 ஆகியோருக்கு வெங்கட சுப்பிரமணியம் ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.


பட்டதாரி ஆசிரியர் செந்தில் கொடிகாத்த குமரனின் சிறப்பை மிகவும் அழகாக எடுத்துரைத்தார். உதவி தலைமை ஆசிரியர் செலின் ராணி, சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற பாடலை பாடினார். மாணவர்கள் தர்ணீஷ், தர்ஷன், ஹர்ஷந்த், இன்பழகன், ஆகியோர் உரையும், ராபின் கவிதையும் பாடி விழாவினை சிறப்பித்தனர்.


மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர் சுசிலா பரிசுகள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சரவணன் நன்றியுரை கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img