நீலகிரி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடனுதவி பெற்று தொழில் செய்து வரும் பயனாளிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர் பயணத்தின் போது நேரில் சந்தித்து கலந்துரை யாடினார்.
நீலகிரி மாவட்டம் சிட்கோ தொழிற்சாலை பகுதியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், பல்வேறு திட்டங் களின் வாயிலாக கடனுதவி பெற்று தொழில் செய்து வரும் பயனாளிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர் பயணத்தின் போது நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு திட்ட ங்களின் கீழ் தொழில் செய் வதற்காக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், நீட்ஸ் உள்ளிட்ட திட்டம் நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் அண் ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி செந்தில்குமார் என்பவர் ரூ.42 லட்சத்தில் ரூ.14.70 லட்சம் மானியத்தில் யுபிவிசி பைப் உற்பத்தி, கதவு மற்றும் ஜன்னல்கள் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு விற்பனை செய்யப்படும் இடங்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தொடர்பாக கேட்டறிந்தோம். மேலும், மூலதன மானிய திட்டத்தில் முரளிதர்ராவ் என்பவர் ரூ.8.43 லட்சம் மானியத்தில் ஹோம்மேட் சாக்லெட் உற்பத்தி, பேக்கரி யூனிட், ஜஸ்கிரீம் உற்பத்தி, உடுப்பி தின்பண்டங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர். அதனையும் நேரில் பார்வையிட்டோம்.
அதேபோல், நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரம்யா என்பவர் ரூ.13.34 லட்சத்தில் ரூ.2.78 லட்சம் மானியத்தில் உற்பத்தி செய்யும் பேக்கரி பொருட்கள் மற்றும் நித்யா என்பவர் ரூ.28.33 லட்சத்தில் ரூ.4.95 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள வணிக சலவை நிலையத்தினையும் பார்வையிட்டோம்.
மேலும், உதையன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மூலதன மானிய திட்டத்தில் அட்டை பெட்டி உற்பத்தி மற்றும் யூகலிப்டஸ் வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்யும் பணிகளையும், அசார் முகமது என்பவர் காப்பி தூள் உற்பத்தி செய்யும் பணிகளையும், பஸ்லூர் என்பவரின் சாக்லேட் உற்பத்தி, ஜோசப் என்பவரின் இசைக்கருவி உற்பத்தி, ஊட்டி கிராப்ட்ஸ் தொழிற்சாலையின் மெழுகு வர்த்தி மற்றும் நினைவு பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் குறித்து கேட்டறிந்தோம். இவ்வாறு அவர் கூறினார். இச்செய்தியாளர் பயண த்தின் போது, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கார்த்திகை வாசன், உதவி இயக்குநர் திலகவதி, சிட்கோ தொழிற் சாலை கிளை மேலா ளர் சண்முவேல், புள்ளி யியல் ஆய்வாளர் பிரியா (மா வட்ட தொழில் மையம்) உட்பட பலர் உடனிருந்தனர்.



