fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

கோவை வரதராஜபுரம் என்.ஜி.ஆர் மேல்நிலைப்பள்ளியில் 29ம் ஆண்டு தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு சுழற்கோப்பை-2025க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

உடன் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.சதாசிவன், லட்சுமணன், விளையாட்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பத்மநாபன், அமிர்தராஜ், அசோக்குமார், சிவசங்கர், கண்ணப்பன், அருண், நீலிக்கோணாம்பாளையம் பகுதி திமுக பொறுப்பாளர் சிங்கை அன்பு,54 வது வட்ட கழகச் செயலாளர் கே.ஆனந்தகுமார், கொ.ம.தே.க.கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.தனபால், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img