கோவை மாநகரின் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்டான அடிஷியா தமிழ்நாடு மாநிலத்தின் சிறு நகரங்களுக்கும் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டை எடுத்து பயணிக்கிறது.
இப்பயணத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக தனது பிராண்டு தூதராக பிரபல நடிகை திரிஷா கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டிருப்பதை இந்நிறுவனம் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.
அடிஷியா நிறுவனத்து டனான இணைவு குறித்து திரிஷா கிருஷ்ணன், “வெறுமனே வீட்டுமனை செயல்திட்டங்களை உருவாக்குவதோடு நிறுத்தி விடாமல் புதிய சிந்தனை களோடு சமூகங்களை மேம்படுத்தி கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒரு இயக்கத்தின் ஒரு அங்கமாக இணைந்து செயல்படுவதில் நான் பெருமை கொள்கிறேன்” என்று கூறினார்.
திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் புதிய செயல் திட்டங்களை அடிஷியா தொடங்குகிறது. அத்துடன் நீலாம்பூர், பிச்சனூர், காலாப்பட்டி, சூலூர் மற்றும் கோவைபுதூர் ஆகிய பகுதிகளிலும் வீட்டுமனை திட்டங்களை செயல் படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இது குறித்து அடிஷியா டெவலப்பர் நிறுவனர் – நிர்வாக இயக்குர் மணிகண்டன் பேசுகையில், “இரண்டு ஆண்டுகளில் ரூ.1000 கோடி வருவாய் என்ற இலக்கை அடைவதற்காக எமது பணியை நாங்கள் தொடங்குகின்ற நிலையில் எமது பிராண்டு தூதராக திரிஷா அவர்கள் எங்களோடு இணைவதில் நாங்கள் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.



