நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சி பகுதியில் ரூ.42.84 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சி பகுதியில் ரூ.42.84 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று (9ம் தேதி) செய்தியாளர்கள் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் மூலம் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப குடிநீர், சாலை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும், தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கோத்தகிரி நகராட்சி பகுதிகளில் மொத்தம் 21 வார்டுகளில் 105 குக்கிராமங்கள் உள்ளது. இதில் கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட ஈளாடா தடுப்பணையிலிருந்து கோத்தகிரி நகர பகுதிகளிலுள்ள, 9 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.42.69 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோக முறை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு விரைவாக பணிகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2024-&2025ம் ஆண்டில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கேம்ப் லைன் பகுதியில், வண்டிபேட்டை ரோடு முதல் தூய்மையாளர் குடியிருப்பு பகுதி வரை நடைபெற்று வரும் கான்கீரிட் சாலை மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, இதனையும் விரை வாக முடித்திட அறிவுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், கோத்தகிரி நகராட்சி பகுதியில், ரூ.42.84 கோடி மதிப்பில், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொது மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.
இச்செய்தியாளர் பயணத்தின்போது, குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா, கோத்தகிரி நகராட்சி ஆணையர் மோகன், கோத்தகிரி வட்டாட்சியர் ராஜலட்சுமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



