fbpx
Homeபிற செய்திகள்தி.மு.க. பாக முகவர்களுக்கு பயிற்சி

தி.மு.க. பாக முகவர்களுக்கு பயிற்சி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க. மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை வீடு வீடாக கொண்டு செல்லும் வகையில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டி காலனி, பெரியகடை வீதி பகுதிகளை சேர்ந்த தி.மு.க. பாக முக வர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு பயிற்சி கூட்டம் அசோக் நகர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, கெம்பட்டி காலனி, பெரியகடை வீதி பகுதிகளில் தங்க நகை தொழிலாளர்களின் வசதிக்காக கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்றார்.

இதில் துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன், பகுதி செயலாளர்கள் மார்க்கெட் மனோகரன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு தொகுதி பார்வையாளரும், தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளருமான குன்னூர் அன்வர்கான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

இதுபோன்று காந்திபுரம் பகுதி, சிவானந்தா காலனி பகுதி பயிற்சி கூட்டம் மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img