fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி தாளமுத்து நகர் பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தாளமுத்து நகர் பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான சர்வதேச தினம், மா.பொ.சிவஞானம் பிறந்தநாள் விழா, முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை தாங்கினார்.


காமராஜர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் இரா.பாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புத்தக வாசிப்பு நற்பணி மன்ற மாவட்ட தலைவர் எழுத்தாளர் ஆ.மாரிமுத்து, கலை வளர்மணி சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்றம் அமைப்பாளர் ரவி, தலைவர் லாரன்ஸ் செயலாளர் வழக்கறிஞர் சிலுவை பொருளாளர் ஆஸ்வால்ட் ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img