Homeபிற செய்திகள்கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,சிதம்பரத்தில் அன்னதானம் மற்றும் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

சிதம்பரம் சின்னசெட்டித் தெருவில் திமுக பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் முன் னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர திமுக செயலாரும், நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில், எஸ்.பி.கோவில் தெருவில் பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அப்புசந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரிக் கப்பட்ட கருணாநிதி உருவப்படத் துக்கு மாலை அணிவித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பின்னர், மாலைக்கட்டிதெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பும், பள்ளிக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன், பொறியாளர் அணி அமைப்பாளர் அப்புசந்திரசேகர், நகர துணைச் செயலர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோவன், நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் க.அருள், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஸ்ரீதர், நிர்வாகிகள் ஆர்.ரமேஷ், மன்னை.சிவா, முகம்மது இஸ்மாயில், இளைஞரணி துணை அமைப் பாளர் யுவராஜ்,நகர பொறியாளர் அணி அமைப்பாளர் கார்த்திக்,விக்ரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img