Homeபிற செய்திகள்ரூ.2.25 கோடி மதிப்பிலான கட்டிடங்களை அரசு பள்ளிக்கு வழங்கிய ஈரோடு தொழிலதிபர் அமைச்சர் எஸ்.முத்துசாமி பாராட்டு

ரூ.2.25 கோடி மதிப்பிலான கட்டிடங்களை அரசு பள்ளிக்கு வழங்கிய ஈரோடு தொழிலதிபர் அமைச்சர் எஸ்.முத்துசாமி பாராட்டு

ஈரோட்டை சேர்ந்த அலைஸ் ப்ளூ பைனான் சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.சித்த வேலாயுதம் ஈரோடு நஞ்சப்பன் கவுண்டவலசு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2.25 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் பள்ளி தளவாடங்களை வழங்கியதற்கு வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி பாராட்டு தெரிவித்தார். பள்ளி கட்டடங்களை அவர் இன்று திறந்து வைத்தார்.

அப்போது அமைச்சர் எஸ்.முத்துசாமி பேசியதாவது:
“சித்த வேலாயுதம் எந்த விதமான விளம்பரமுமின்றி அமைதியான முறையில் இந்த பள்ளிக்கு ஏழு வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் சேர் டேபிள் உட்பட அனைத்தையும் நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி என்ற அரசு திட் டத்தின் கீழ் வழங்கி உள்ளார்.

இதேபோன்று மாவ ட்டத்தின் இதர பல பள்ளிக ளுக்கும் பலர் நன்கொடை அளித்துள்ளனர். அனை த்து பள்ளிகளிலும் அடிப் படை வசதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய ப்பட் டுள்ளது. பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் சென்று பள்ளிகளின் பிரச்சனைகளை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் பேசினார்
.
சித்த வேலாயுதம் கூறுகையில் எனது ஷேர் புரோக்கிங் நிறுவனம் மூலம் கொரோனா காலத்தில் ரூ.1 கோடி அரசுக்கு நன்கொடை அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி களின் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் ஏற்படுத்த ரூ 1.5 கோடி இதுவரை தரப்பட்டுள்ளது. இந்த நஞ்சப்ப கவுண்டன் வலசு பள்ளியில் இரண்டேகால் கோடி மதிப்பிலான பள்ளி கட்ட டங்கள் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனது நிறுவனத்தின் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி எனப்படும் லாபத்தில் இரண்டு சதவீதம் மத்திய அரசு உத்தரவுப்படி பள்ளி வளர்ச்சிக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. தனது நிறுவனம் இந்தியா முழுவதும் 18 கிளைகள் கொண்டுள்ளது. நான் ஈரோடு மாவட்டம் பூந்துறை சேமூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img