fbpx
Homeபிற செய்திகள்குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி

குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள டாக்டர் ஆர்ஏஎன்எம் கலை அறிவியல் கல்லூரி ஈரோடு மாவட்டத்திலேயே குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்குகிறது. கடந்த 31 வருடங்களாக பல கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வரும் முதலியார் கல்வி அறக்கட்டளை மூலம் மிகச் சிறந்த கல்வியை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

கல்லூரி செயலாளர் கே கே பாலுசாமி, தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் அறக்கட்டளை குழு சிறப்பான நிர்வாகத்தை அளித்து வருகிறது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ பழனியப்பன் தலைமையில் சிறந்த பேராசிரியர்களை கொண்டு கல்வி வழங்கப்படுகிறது.

இக்கல்லூரியில் 15 இளங்கலை, இரண்டு முதுகலை, ஒரு பிஹெச்டி ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. நாக் பி பிளஸ் சான்றிதழ் நவீன கணினி மையம் கலையரங்கம் ஸ்மார்ட் வகுப்புகள் மல்டிமீடியா மையம் போன்ற பல வசதிகள் உள்ளன. யுபிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கல்லூரிக்கு மிக அருகிலேயே அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலகம் செயல்படுகிறது. எனவே அவ்வலுவகத்தில் செயல்படும் அனைத்து தேர்வாணைய பயிற்சிகளுக்கு மாணவர்கள் கலந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த கல்வி ஆண்டில் மட்டும் 26 புகழ்பெற்ற நிறுவனங்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளன. 16 முகாம்கள் மூலம் 213 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட்டு 174 மாணவர்கள் வேலை பெற்றுள்ளனர்.

முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு செங்குந்தர் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img