fbpx
Homeபிற செய்திகள்கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி 10-ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி

கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி 10-ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி

ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சியை அடைந்தனர்.

தேர்வு எழுதியவர்களில் 490/500 மதிப்பெண்கள் பெற்று அப்சர் அலி மற்றும் உவைஸ் அப்துல் காதர் ஆகியோர் முதலிடமும், 488 பெற்று கனுவர்சன் இரண்டாமிடமும், 485 பெற்று காவ்யபாரதி மூன்றாமிடமும் பெற்றனர்.

தேர்வு எழுதியவர்களில், 480 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவர்களும் 470க்கு மேல் 13 மாணவர்களும் 450க்கு மேல் 32 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

கணிதம் 4 மாணவர்கள் அறிவியல் 4 மாணவர்கள், சமூக அறிவியல் 4 மாணவர்களும் 100/100 மதிப்பெண்கள் பெற்றனர்.

பள்ளி டிரஸ்டின் தலைவர் குமாரசுவாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், தாளாளர் தேவராஜா, பள்ளியின் முதல்வர் மைதிலி ஆகியோர் சாதனை மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img