மறுமலர்ச்சி திமுகவின் நிர்வாக வசதிக்காக ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, ஈரோடு தெற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டது. அவற்றிற்கு முறையே சோ.வீரக்குமாரன், கே.கே.சேது பாஸ்கரன், மு.கோபால் ஆகியோர் மாவட்ட பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று மாவட்ட அலுவலகத்தில் தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வழக்கறிஞர் பெ.மு.குழந்தைவேலு தலைமையில் நடைபெற் றது. முன்னதாக ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள பெரியார், அண்ணா, கலைஞர், அம் பேத்கர் உருவச்சிலைக ளுக்கு மாலை அணிவித்த னர். மாவட்ட நிர்வாகிகள் வி.எம்.கந்தசாமி, கொடுமுடி சண்முகம், வி.செல்வராஜ், முகமது சாதிக், முசிறி இரவிச்சந்திரன், தமிழீழசோமு, க.த.மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



