கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, நஞ்சை புகலூர் கிராமத் தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2025 ஜூன் மாதம் நிறைவு செய்ய திட்ட மிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
சுமார் 1056 மீட்டர் நீளத்தில் 73 கதவணைகளுடன் வினாடிக்கு 3,60,000 கன அடி நீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்படும் இந்த கதவணையில் 0.80 டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்கலாம்.
இந்த கதவனை மூலம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் ஆயி ரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்தை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், ஏற்கனவே திட்டமிடப் பட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவ ணையை பார்வையிட்ட பிறகு காவிரி- வைகை- குண்டாறு திட் டத்தை ஆய்வு செய்தனர். மாய னூர் கதவணையில் ஒரு டிஎம்சி வரை மட்டுமே நீர் சேமிக்க இய லும்.
அதே சமயத்தில் வெள்ள காலத்தில் உபரியாக கடலுக்குச் செல்லும் நீரை தடுத்து காவிரி- வைகை- குண்டாறு வெள்ளநீர் இணைப்பு கால்வாய் திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்ற 2021 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 2025 ஜூன் மாதம் முடிக்க திட்டமிட்டு முதல் கட்டமாக 118.45 கிலோமீட்டர் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது முதல் கட்ட பணியில் 85- சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்தப்பணிகளையும் ஆய்வு செய்த பிறகு அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் தயாளகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், காவிரி வைகை குண் டாறு இணைப்பு திட்ட வருவாய் அலுவலர் விமல் ராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



