கோவை பேரூர் வட்டத் திற்குட்பட்ட தெலுங்குபாளை யம் பிரிவு, பேருர், தொண்டாமுத்தூர் பேரூராட்சி, தேவராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள முதல்வர் மருந் தகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனை, தார்சாலை பணிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பேருர் வட்டாட்சியர் ரமேஷ்குமார், தொண்டாமுத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலாராணி, ஜெயகுமார், உதவி பொறியாளர் ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 14ம் நாள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படுவதால் சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அங்குள்ள பொது இ சேவை மையம், பதிவறை ஆகியவற்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் தன்பதி வேடுகளையும், கோப்புகளையும் முறையாக பராமரிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, தெலுங்கு பாளையம் பிரிவு பகுதியில் கோயம்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு, வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
தொண்டாமுத்தூர் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டு, மாணவர்களின் வருகை மற்றும் கற்றல்திறன் குறித்து ஆசிரியர் களிடம் கேட்டறிந்தார். பின்னர், மாணவர்கள் கழிப்பறை சுத்தம் தூய்மையாக பராமரிக்கவும், மற்றும் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்திடவும் அவ்வபோது, ஆய்வு மேற்கொள்ளவும் பேரு ராட்சி செயல் அலுவலருக்கு அறி வுறுத்தினார். அப்பள்ளியிலுள்ள அங்கன்வாடி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டும், அங்கு பயிலும் குழந்தைகள் வயதிற்கு ஏற்ற எடை மற்றும் உயரத்தில் உள்ளார் களா என்பதையும், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் அங்கன்வாடி பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.
பின்னர், தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில், ஆண்கள் மருத்துவ பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, ஆய்வகம், சித்த மருத்துவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டதுடன், மருத்துவம னைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும், மருத்துவ உபகரணங்கள் குறித்தும் மருத்துவரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, தேவராய புரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, சாலையின் அகலம் குறித்தும், சாலையில் குறிப் பிட்ட அளவு ஜல்லி கலவை பயன் படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.



