மின்சார இயக்கத்திறன் மற்றும் தூய்மையான ஆற்றல் கண்டுபிடிப்புகளில் ஒரு முன்னணி நிறுவனமான பியூர், இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தை துரிதப்படுத்த தயாராக உள்ள அதிநவீன ஆற்றல் சேமிப்பு தயாரிப்புகளின் வரிசையான பியூர் பவரின் அறிமுகத்தை அறிவித்தது.
இந்தியா தனது கார்பன் நீக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை நோக்கி முன்னேறுகிறது. பியூர் பவர் ஹோம், பியூர் பவர் கமர்சியல் மற்றும் விரைவில் வரவிருக்கும் பியூர் பவர் கிரைட் ஆகியவற்றின் மூலம் அனைத்து துறைகளின் ஆற்றல் தேவைகளையும் பியூர் பவர் பூர்த்தி செய்கிறது.
பியூர் பவர் ஹோம் தயாரிப்புகள் ரூ.74,999 விலை முதல் (ஆலை விலை) தொடங்குகின்றன.
பியூர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நிஷாந்த் டோங்கரி கூறுகையில், “பியூர் பவர் என்பது ஒரு ஆற்றல் சேமிப்பு தயாரிப்பு மட்டுமல்ல அதற்கு மேலாக இந்தியாவின் கார்பன் நீக்கல் இலக்குகளுக்கான ஒரு அர்பணிப்பாக இருக்கிறது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, பியூர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரோஹித் வடேரா கூறுகையில்,” பியூர் பவர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆற்றல் சேமிப்பு ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் அரசின்
தொலைநோக்குடன் ஒத்துப்போகிறது” என்றார்.



