fbpx
Homeபிற செய்திகள்தங்கம் புற்றுநோய் மையத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நோய் கண்டறிதல் பரிசோதனை

தங்கம் புற்றுநோய் மையத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நோய் கண்டறிதல் பரிசோதனை

நாமக்கல்லில் உள்ள தங்கம் புற்றுநோய் மையத்தில் இந்தியாவின் முதல் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இன்ஷிடெண்டல் புல்மொனரி நோடல் கண்டறிதல் கிளினிக்கை தொடங்கியுள்ளது.


இந்த முன்னெடுப்பு, உலகின் முன்னனி மருத்துவ நிறுவனமான ஜான்சன் & ஜான்சன்
மெட்டெக்கின் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி மருத் துவமனைகளில் ஏ.ஐ மூலம் இயங்கும் இன்ஷிடெண்டல் புல்மொனரி நோடல் கிளினிக்குகளை நிறுவ வடிவமைக்கப்பட்ட Qure.ai இடையேயான ஒத்துழைப்பில் உருவான ப்ராஜக்ட் ப்ரீத்-இ.செட்டின் ஒரு பகுதியாகும்.


இந்தியாவில் நுரையீரல் புற்று நோய் அறுவை சிகிச்சையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவண ராஜமாணிக்கம் மூலம் இந்த ஏ.ஐ.செயலி அறிமுக மாகியுள்ளது.

இது குறித்து, தங்கம் புற்றுநோய் மைய தொராசிக் சர்ஜிக்கல் ஆன்காலஜி இயக்குனர் டாக்டர் சரவண ராஜமாணிக்கம் பேசுகையில், “ரோபாட்டிக்ஸ் போன்ற மேம்பட்ட அறுவை சிகிச்சை நுட்பங்களுடன் ஏ.ஐ.யின் துல்லியத்தை இணைப்பது, ஆரம்பகால நோய் கண்டறிதலிலிருந்து மேம்பட்ட சிகிச்சை வரை, அனைத்தும் ஒரே கூரையின் கீழ் ஒரு விரிவான பாதையை நமக்கு வழங்குகிறது” என்றார்.

Qure.ai-யின் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் வாரியர் கூறுகையில், “வழக்கமான செஸ்ட் எக்ஸ்-ரேவை கொண்டு ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோய்
எச்சரிக்கை கருவிகளாக மாற்ற தங்கம் புற்றுநோய் மையத்துடனான கூட்டாண்மை எங்கள் ஏ.ஐ தீர்வுகளின் திறனுக்கான ஒரு சக்தி வாய்ந்த எடுத்துக்காட்டு” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img