தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பாக முத்தையாபுரம் தோப்புதெரு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புனித ரமலான் மாத இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, எஸ்கேஎஸ் திருமண மண்டபத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மாவட்ட தேமுதிக செயலாளர் வி.தயாள லிங்கம் தலைமையில் பள்ளி ஜமாத் தலைவர் வி.செய்யது மரைக்காயர், முத்தையாபுரம் பகுதி செயலாளர் வி.ஸ்மார்ட் சுரேஷ், மாவட்ட தொழிற் சங்க துணை தலைவர் அரசமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் விஜயன் வரவேற்றுப் பேசினார்.
தலைமை கழக பேச் சாளர் ஆனந்த அருணா சிறப்புரை ஆற்றினார். பள்ளி ஜமாத் நிர்வாகிகள் சி.முகமது, சம்சுகனி மரைக்காயர், மஜித், அப்பாஸ் (தமுமுக -மாநகர செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினர்.
இதில் ஒன்றிய செய லாளர்கள் ஜெயக்குமார், மந்திரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் வல்லரசு துரை, திருவன், ராமகிருஷ்ணன், மாலதி, தலைமை செயற்குழு உறுப்பினர் கள் இராஜ பொம்மு, மோகன்தாஸ் காந்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சின்ன துரை, செல்வம், கோபால கிருஷ்ணன், பகுதி கழக செயலாளர்கள் சுரேஷ், நாராயணமூர்த்தி, அரச முத்து , மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் வி.ரகுமான் பாட்ஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ராதா கிருஷ்ணன், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் போட்டோ கண்ணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கந்தசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளளர் பால்ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் வி.பாபு, மாவட்ட தொண்டரணி செயலாளர் வி.கொம்பு மாடசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளி செயலாளர் பல்க்வி.முரு கன், மாவட்ட தொழிற்சங்க பேரவை தலைவர் ஜி.முருகன், மாவட்ட தொழிற்சங்க பேரவை பொருளாளர் சக்திவேல், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணை செயலாளர்கள் ஷேக் காசிம், அக்பர், ஒன்றிய, மாநகர் பகுதி நிர்வாகிகள் முத்துகுமார், அரி, மணிகண்டன், முருகன், கணேசன், மாடசாமி, ஆனந்த கிருஷ்ணன், தமிழ்செல்வன், சுப்பு, மாரிமுத்து, கிருஷ்ணசாமி, நாகசாமி, இருளப்பசாமி, ஆதிலிங்கம், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



