பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் 16 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
மாணவர்களை ஒயிட் மெவரிக், ப்ளூ பிரேவஸ், ரெட் டைட்டன்ஸ், பிளாக் பாந்தர்ஸ் என 4 குழுவாக பிரித்து மாணவர்களுக்கு கடந்த நான்கு நாட்களாக கால்பந்து கிரிக்கெட், வாலிபால் த்ரோ பால், செஸ் ,மற்றும் தடகள போட்டிகளான 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர்,குண்டு எரிதல், வட்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்ட போட்டிகளும் நடைபெற்றது.
பதினாறாம் ஆண்டு விளையாட்டு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அகில இந்திய கால்பந்து நடுவர் மார்ட்டின் (தீயணைப்பு நிலைய அதிகாரி, கோவைப்புதூர்) பங்கேற்றார். யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம் தலைமை தாங்கினார், முனைவர் மைதிலி சண்முகம் இணைத் தலைவர் முன்னிலை வகித்தார்,
சிறப்பு விருந்தினர் மார்ட்டின் தனது உரையில் சாதி மத பாகுபாடு பாராமல் அனைவரும் ஒன்றிணையும் ஒரு சிறப்பான இடம் என்பது விளையாட்டில் மட்டும்தான், சாதனைகள் செய்ய வேண்டுமெனில் பல தடைகளை தாண்டி வரவேண்டும், இன்று சாதனையாளர்களாக இருப்ப வர்கள் எல்லாம் மிகுந்த கஷ்டத் தோடு தான் அந்த சாதனையை எட்டிப்பிடித்தனர், என்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 132 புள்ளிகளுடன் ப்ளூ பிரேவஸ் அணியினர் பெற்றனர். இரண்டாவது இடத்தை பிளாக் பந்தர்ஸ் அணியினர் 98 புள்ளிகள் பெற்றனர் .
அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியில் உடற்கல்வித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் செய்து இருந்தார்.



