fbpx
Homeபிற செய்திகள்விருதுநகரில் வெளிவட்ட புறவழிசாலை அமைக்கும் பணிக்கு நிதித்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

விருதுநகரில் வெளிவட்ட புறவழிசாலை அமைக்கும் பணிக்கு நிதித்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடமலையாபுரம் சோதனைச் சாவடி அருகில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், ரூ.120 கோடி மதிப்பில், திருவில்லிபுத்தூர் சிவகாசி சாலையை சிவகாசி விருதுநகர் சாலை உடன் இணைக்கும் சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட புறவழிசாலை அமைக்கும் பணிக ளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலை மையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் பயணத்தின்போது, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிப டுத்துவதற்கும் பல்வேறு திட்டங் களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட சாலை அமைப்பதற்கான ஒரு கட்டமாக இன்று ரூ. 120 கோடி மதிப்பில் திருவில்லிபுத்தூர் சிவகாசி சாலையை சிவகாசி விருதுநகர் சாலை உடன் இணைக்கும் பணி க்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சியில் பட்டாசு தொழிற்சாலை மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சிவகாசி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் கார ணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, சிவகாசி நகருக்கு வெளிப்புற சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.
தற்போது சிவகாசி நகருக்கு வெளிப்புற சுற்றுச்சாலை அமைக்கும் பணி 3 கட்டங் களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள் ளது. சிவகாசி வெளிப்புற சுற்றுச்சாலை அமையவுள்ள சாலையின் மொத்த நீளம் 33.520 கி.மீ ஆகும். இதனால் திருவில் லிபுத்தூர் சிவகாசி சாலை விருதுநகர் சிவகாசி-சாலை, சாத்தூர் சிவகாசி கழுகுமலை சாலை சிவகாசி ஆலங்குளம் சாலை, சிவகாசி எரிச்சநத்தம் சாலை, சிவ காசி கன்னிசேரி சாலை மற்றும் விஸ்வநத்தம் வெங்கடாசலபுரம் சாலை உள்ளிட்டவை சுற்றாக இணைக்கப்படும்.

இதில் கீழத்திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் செல்வதால், அந்த இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது வடபட்டி, நமஸ்கரித் தான்பட்டி, கீழத்திருத்தங்கல், அனுப்பன்குளம், நாரணாபுரம், கொங்கலாபுரம் ஆகிய 7 வருவாய் கிராமங்களுக்கு நில ஒப்படைப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக பூவநாத புரம் விலக்கு முதல் வடமலாபுரம் பாலம் வரை 9.92 கி.மீ. சாலை அமைக்க ரூ.120 கோடி மதிப்பீட்டில் வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியானது திருவில்லிபுத்தூர் சிவகாசி சாலை முதல் சிவகாசி எரிச்சநத்தம் சாலை மற்றும் சிவ காசி எரிச்சநத்தம் சாலை முதல் சிவகாசி விருதுநகர் சாலையை இணைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி களில் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகை யில் ரூ.2.02 கோடி மதிப்பில் 80 மின்கலன் வாகனங்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தூய்மைப் பணியாளர்க ளின் பயன்பாட்டிற்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இந்த செய்தியாளர் பயணத் தில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (விருதுநகர்) பாக்கி யலட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img