fbpx
Homeபிற செய்திகள்உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் நிபுணர்களை உருவாக்கும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு

உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் நிபுணர்களை உருவாக்கும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், மாணவர்களுக்கான ஊக்கமளிக்கும் அமர்வை கோவையில் நடத்தியது.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய துறையாக மாறிவரும் லாஜிஸ்டிக்ஸ் துறையில், “உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் நிபுணர்கள்” உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை, அதன் வலுவான தொழில் துறை அடிப்படையால், லாஜிஸ்டிக்ஸ் துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது.

கொச்சி மற்றும் சென்னை துறை முகங்களுடன் நேரடி இணைப்பினைக் கொண்டுள்ள கோவை மாநகரம், 50,000-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் இயங்கும் வளமான பொருளாதார மையமாக உள்ளது. 2030க்குள் இந்தியாவில் 1.5 முதல் 1.7 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சக்தி லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு மட்டும் தான் இருக்கிறது.

தொழில்கள், கல்வித்துறை மற்றும் பயிற்சி நிறுவனங்களை ஒருங்கிணைத்து, லாஜிஸ்டிக்ஸ் துறையில் திறமையான பணியாளர்களை உருவாக்கம், தொழில் துறை சார்ந்த பயிற்சிகள், பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அடுக்கு-2, அடுக்கு-3 நகரங்களில் உள்ளூர் பயிற்சி மையங்களை அமைத்தல் போன்ற பணிகளை இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகள், திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் லட்சிய முயற்சிகளின் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் லாஜிஸ்டிக்ஸ் நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் மஹிதர் கூறுகையில், “லாஜிஸ்டிக்ஸ் திறன்களை மேம்படுத்த சிறந்த இடமாக கோவை திகழ்கிறது. மாணவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு சர்வதேச அளவிலான வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img