விஐடி சென்னை வளாகத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடை பெற்றது.
இந்த விழாவில் ஆளில்லா பறக்கும் விமானம், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), துல்லிய வேளாண்மை, கடலோர ஆராய்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆய்வுகள் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் மற்றும் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை யின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.தொடர்ந்து சௌமியா சுவாமிநாதன் பேசியதா வது: ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே சம வேலைக்கு சம ஊதியம் என்பதில் உலக அளவில் இடைவெளி இருந்து வருகிறது. இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்குதான் மகப்பேறு விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. தமிழக அரசு பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் இலங்கை பாதுகாப்பு துறையின் உதவிச் செயலர் சச்சினி திசாநாயக்க, விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்பட பலர்கலந்து கொண்டனர்.



