fbpx
Homeபிற செய்திகள்இஸ்பானி சென்டர் நடத்திய குவிஸ் பைட்ஸ் 3.0 சமையற்கலை போட்டி 

இஸ்பானி சென்டர் நடத்திய குவிஸ் பைட்ஸ் 3.0 சமையற்கலை போட்டி 

இஸ்பானி சென்டர் ஏற்பாடு செய்து சென்னையின் ஜிஆர்டி கிராண்டு வளாகத்தில் நடைபெற்ற க்விஸ் பைட்ஸ் 3.0 சிறப்பாக நடைபெற்றது. தென்னிந்தியா முழுவதிலுமிருந்து இப்போட்டியில் 100க்கும் அதிகமான சமையல் வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பல பஸ்ஸர் சுற்றுகள் மற்றும் அதிவேக கேள்வி பதில் அமர்வுகள் ஆகியவை இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு பங்கேற்பாளரும் அவரது திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை பெறுவதை உறுதி செய்திருந்தது.  

விறுவிறுப்பாக நடைபெற்ற பல சுற்றுக்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முதன்மையான மதிப்பெண்களைப் பெற்ற ஆறு குழுக்கள் மட்டும் முன்னேறின.  இதில் மிகச்சிறந்த சமையற்கலைஞர்கள் மட்டுமே வெற்றிகாண முடியும் என்ற அளவிற்கு போட்டி இருந்தது.  

தென்னிந்திய சமையற்கலை சங்கத்தின் தலைவர் செஃப் தாமோதரன் மற்றும் அதன் பொதுச்செயலர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகிய இருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். க்விஸ் பைட்ஸ் 3.0ஐ மாபெரும் வெற்றி நிகழ்வாக ஆக்குவதில் இவர்கள் இருவரும் ஆற்றிய பங்கு மிகப்பெரியது.  

இதில் செஃப் தாமோதரன் கூறியதாவது: 

க்விஸ்பைட்ஸ் 3.0 என்பது, தென்னிந்தியாவின் சமையற் கலை வல்லுனர்களது சமூகத்திற்குள் இயங்கி வரும் சிறப்பான திறமைகளை பலரும் அறியுமாறு வெளிப்படுத்திய ஒரு நேர்த்தியான நிகழ்வாகும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்பானி சென்டரின் இயக்குனர் திரு. கேசன் பேசுகையில்,

“தென்னிந்தியாவில் சமையற்கலை வல்லுனர்கள் ஓரிடத்தில் ஒருங்கிணைந்து கூடுவதற்கான ஒரு தளத்தை வழங்கியிருப்பதில் நாங்கள் பெருமிதமடைகிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img