fbpx
Homeபிற செய்திகள்கோவை லாலி ரோடு புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா

கோவை லாலி ரோடு புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா

கோவை ஆர்.எஸ்.புரம், லாலி ரோடு புனித அருளானந்தர் ஆலயத்தின், ஜூபிலி ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி அந்தோணி செல்வ ராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிப்.5 அன்று புனிதவளனார் இளங்குருமட உதவிஅதிபர் அருட்பணி அருள் இருதயராஜ் “ இறைவார்த்தையை வாழ்வாக்கிய புனித அருளானந்தர்” என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தி திருப்பலி நிறைவேற்றினார்.

6ம் தேதி கோவை மறைமாவட்ட ஆயரின் செயலாளர் அருட்பணி கிளாட்வின் ”உண்மையை உரக்கச் சொல்லும் புனித அருளானந்தர்” என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தி திருப்பலி நிறைவேற்றினார்.

இன்று (7ம் தேதி) புனித மைக்கேல் அதிதூதர் பேராலய உதவி பங்குத்தந்தை அருட்பணி அருள் சந்தோஷ் “ நலம் தரும் செம்மண் புனிதர்” என்ற தலைப் பில் மறையுரை ஆற்றி திருப்பலி நிறைவேற்றினார்.

திருவிழா சிறப்பு நிகழ்வாக வருகிற 9ம் தேதி (ஞாயிறு) அன்று காலை 7.45 மணியளவில் கோவை மறைமாவட்ட ஆயர் லெ.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கூட்டு பாடற்திருப்பலியும் அதை தொடர்ந்து புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் போன்ற அருட்சாதன நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றது.

அன்றைய தினம் மாலையில் 5.30 மணியளவில் கோவை மறைமாவட்ட முதன்மைகுரு பேரருள் ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் மற்றும் மறை மாவட்ட குருக்களும் இணைந்து ஆடம்பர தேர்த்திருவிழா திருப் பலி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற உள்ளது.

அதன் பிறகு வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் புனித அருளானந் தரின் சுரூபம் வைக்கப்பட்டு, ஆல யத்திற்கு அருகிலுள்ள வீதிகளில் பவனியாகக் கொண்டு வரப்படும். இறுதியில் வானவேடிக்கையும் நடைபெறும்.

திருவிழா ஏற்பாடுகளை, புனித அருளானந்தர் ஆலய பங் குத்தந்தை அருட்பணி ததேயுஸ் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை கரோலின் சிபு, அருட்சகோதரிகள் மற்றும் பல்வேறு சபைகளின் பொறுப்பாளர்கள் இணைந்து செய்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img