fbpx
Homeபிற செய்திகள்கோவை எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ., வழிகாட்டி விழா - கண்காட்சி

கோவை எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ., வழிகாட்டி விழா – கண்காட்சி

கோவை எஸ்.எஸ். வி.எம் வேர்ல்டுபள்ளியில், வாழ்க்கையை மேம்படுத் திக் கொள்ளவும், திறனை கட்டமைத்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு
அவசிய மான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி.பி.எஸ்.இ., துணை செயலாளர் சதீஷ்குமார் துவக்கி வைத்து பேசினார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்வதன் பங்கு குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேசினார். வேலைவாய்ப்பு துறை இயக்குனர் டாக்டர் பி. மஞ்சு, வாழ்வியல் பரிந்துரைகளையும், சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.

திறன் வளர்ப்பில் ஊடகங்கள், பொழுது போக்கு அம்சங்கள் திறன் மேம்பாட்டு
கவுன்சிலின் (எம்.இ.எஸ்.சி) பங்கை வலியுறுத்தி தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு நிபுணர் ஜீவன் உத்தமன் பேசினார்.

எம்.இ.எஸ்.சி., யின் திட்ட தலைவர் ஹீனா பரத்வாஜ், திறன் மேம்பாட்டில் எம்.இ. எஸ்.சி.,யின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.

ஐபிஎம் நிறுவனத்தின் முதுநிலை மென்பொருள் மேம்பாட்டாளர் அருண் குமார் பேசுகையில், வளர்ந்து வரும் திறன் மேம்பாட்டில் தொழில் நுட்பம், செயற்கை நுண் ணறிவின் பங்கு குறித்து விளக்கினார்.

விழாவில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img