Homeபிற செய்திகள்பிரதமர் மோடி பிறந்த நாள் விழா: நாமக்கல் நகர பாஜக சார்பில் குழந்தைகளுக்கு பராமரிப்பு பெட்டகம்

பிரதமர் மோடி பிறந்த நாள் விழா: நாமக்கல் நகர பாஜக சார்பில் குழந்தைகளுக்கு பராமரிப்பு பெட்டகம்

பிரதமர் நரேந்திர மோடி, அவரது 74வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாஜக-வினர் பல்வேறு வகையில் இந்த பிறந்த நாளை சேவை தினமாக கொண்டாடினார்.

அந்த வகையில் நாமக்கல் மாநகர பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் பராமரிப்பு பொருட்கள் அடங்கிய தொகுப்பை பரிசளித்து மோடியின் பிறந்தநாளை கொண்டாடினார்.

நாமக்கல் நகர தலைவர் கே.பி. சரவணன் தலைமையில் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த 63 பச்சிளம் குழந்தைகளுக்கு, “குழந்தை பராமரிப்பு கிட்” வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன், நகர பொதுச் செயலாளர்கள் தினேஷ், யுவராஜ், நகர செயலாளர் வேல் ராஜ் பெரியசாமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி, நகரத் துணைத் தலைவர் மணி வேல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img