fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீகாமாஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காவல் துறையால் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்ரீகாமாஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காவல் துறையால் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீகாமாஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காவல் துறையால் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.. பள்ளி துணை முதல்வர் ஜா.க.சுப்புலெட்சுமி வரவேற்புரை வழங்கினார். தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் நுண்ணறிவு காவல் துறை ஆய்வாளர் திரு. எழில் சுரேஷ் சிங்  போதைபொருள் மற்றும் ஆன்ட்ராய்டு கைப்பேசியின் ; தீங்கு குறித்தும்; சிறப்புரை ஆற்றினார். மேலும் காவல் துறையின் உதவி ஆய்வாளர் அனிதா வேணி  போதையினால் ஏற்படும் தீங்கு குறித்து மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் போதை தடுப்பு பிரிவின் காவலர்  மல்லிகா  கலந்து கொண்டார் பள்ளி துணை முதல்வர் ஜா.க.சுப்புலெட்சுமி நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் வேதியியல் ஆசிரியர் சபரி நாகராஜன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, நாட்டுப்பண்ணுடன் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

படிக்க வேண்டும்

spot_img