கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமீபத்தில் மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்து அனைத்து மாநிலங்க ளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் கள். தேசிய கல்விக் கொள்கையில் நல்லதும் உள்ளது. மாநிலத்திற்கு பாத கங்களும் உள்ளன. உதாரணமாக மும்மொழிக் கொள்கையை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டிற்கு தேவையானது இரு மொழிக் கொள்கை எனவும் இது போன்று பாதகமான விஷயங்க ளெல்லாம் இருக்கின்றன.
மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொள்கை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது.
இந்திரா காந்தி எமர்ஜென்சி காலத்தில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு எடுத்து சென்றதால் தான் இந்த பிரச்சனையே வந்தது. கல்வி என்பது மீண்டும் மாநில பட்டியலில் வரவேண்டும். அப்படி வந்தால் ஒவ்வொரு மாநில மும் அதற்கான கொள்கையின் அடிப்படை யில் முடிவெடுப்பார்கள்.
மத்திய அரசு கல்விக் கொள் கையை திணிக்க கூடாது, ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதியை தர மாட்டோம் என்றும் கூறக்கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வரு டத்தில் போதை பொருட்கள் சுமார் ஐந்து மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிக மது கடைகள் இருக்கின்ற மாநிலம் அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்ற மாநிலம் அதிகமான இளம் விதவைகள் இருக்கின்ற மாநிலம் அதிக கல்விக் கடன் பிரச்சனை இருக்கின்ற மாநிலம் அதிக தற்கொலைகள் நடக்கின்ற மாநிலம் அதிக மனநல நோய் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். என தெரிவித்த அவர் இதற்கெல்லாம் காரணம் மது தான் என குறிப்பிட்டார். தமிழ்நாடு இளைஞர்களால் மது இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்கி இருப்பது தான் திராவிட மாடல். இவர்கள் மதுவை விற்பனை செய்யாமல் திணிக்கின்றனர்.
இந்த மது பிரச்சினை குறித்து திருமாவளவன் தற்பொழுதாவது ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் திருமாவளவன் கூட்டத் திற்கு அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு முதலில் அழைப்பு விடுக்கட்டும் என அன்புமணி ராமதாஸ் பதில் அளித்தார்.



