திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), மாநில தடகள சங்க துணைத் தலைவர் மரு.எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தியன் வங்கி சிறப்பான பணியில் ஈடுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசுக்கு கடனுதவிகள் வழங்குவதற்கு உதவியாக இருக்கிற இந்தியன் வங்கிக்கு எனது பாராட்டுக்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் எல்லாம் வாழ்க்கையில் சிறப்பான அந்தஸ்து பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, ஆரணியில் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 872 சுய உதவி குழுவில் உள்ள 11865 நபர்களுக்கு ரூ.99,020 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் 378 சுயஉதவி குழுவில் உள்ள 5394 நபர்களுக்கு ரூ.35.480 கோடி மதிப்பீட்டிலும், வாழ்ந்துக்காட்டுவோம் திட்டத்தில் 29 பயனாளிகளுக்கு ரூ.1.976 கோடி மதிப்பீடு என மொத்தம் 1279 சுய சுயஉதவி குழுக்களுக்கு, 17288 பயனாளிகளுக்கு, ரூ.136.48 கோடி மதிப்பீட்டில் வங்கி பெருங்கடன், வங்கி கடன் இணைப்பு, சமுதாய முதலீட்டு நிதி, இணை மானிய திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் அமைச்சர் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) டாக்டர் மணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யாதேவி, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன், திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் DEO தமிழ் மாறன் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள், அனைத்து வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சமுதாய அமைப்பாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



