Homeபிற செய்திகள்அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தின் 21வது பட்டமளிப்பு விழா

அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தின் 21வது பட்டமளிப்பு விழா

அமிர்தா விஸ்வ வித்யாபீடம் அதன் 21வது பட்டமளிப்பு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடி யது. இவ்விழாவில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் அபய் கரண்டிகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் வேந்தர் ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி காணொளி மூலம் மனதிற்கு ஊக்கமளிக்கும் செய்தியை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக, பெங்களூரு டி வி எஸ் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் தேவரான் கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு மாதா அம்ருதா னந்தமயி மடத்தின் பொருளாளரும், அறங்காவலருமான சுவாமி இராம கிருஷ்ணானந்தபுரி தலைமைத் தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இதில், அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தின் முக்கிய பிரமுகர்களான, பொறியியல் பள்ளியின் டீன் சசாங்கன் ராமநாதன், செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் டீன் சோமன், கார்ப்பரேட் & தொழில் துறை உறவுகளின் இயக்குநர் பரமேஸ்வரன், ரெஜிஸ்ட்ரர் சங்கரன், வணிகவியல் பள்ளியின் டீன் நவ சுப்ரமணியம் மற்றும் வளாக இயக்குனர் சதீஷ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். இதில் சுமார் 2,040 மாண வர்கள், பட்டங்களைப் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img