ரீட் தொண்டு நிறுவனம் சார்பில் ஆசனூரில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் 2013 குறித்த பயிற்சி நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலர் சுதாகர்(DFO) அவர்கள் ஆண் பெண் சமத்துவம் குறித்து கருத்துரையாற்றினார்.
குழு விவாதத்தை ரீட் நிறுவனத்தின் இயக்குனர் கருப்பசாமி வழிநடத்தினார். இதனைத் தொடர்ந்து பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு தடை தீர்வு சட்டம் 2013 பற்றி உமா மகேஸ்வரி அவர்கள் விளக்கக் காட்சி(PPT) மூலம் பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியில் வனச்சரக அலுவலர் ஆசனூர் பாண்டியராஜ், கண்காணிப் பாளர் ஷாஜகான், வனவர் குணசேகரன், வனவர் பாரதி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிச் சாமி கலந்து கொண்டனர்.